tamilnadu

img

தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை

தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை  ரூ.10 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை

கடலூர், செப்.24- தூய்மை காவலர்களின் மாத ஊதி யம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று(செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு வர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தற்கு பொருந்தும் அனைத்து சலுகை களை வழங்க வேண்டும், 18 ஆண்டுகள் பணிபுரிந்த கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் பணி யாற்றும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் பணி காலத்தை கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,கிராம சுகாதார இயக்குநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்  ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், 3ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு காலம் முறை ஊதியத்திலும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்க ளுக்கு ரூ. 20 ஆயிரம் ஊதியமும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிர்வாகி எஸ்.சீதா ராமன், மாநில துணைச் செயலாளர் ஜி.வேலவன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் சு.ராமலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி  உரையாற்றி னார். இதில், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜி.ரமேஷ், வேல்முருகன், அருள், வெங்கடேசன், குமரேசன், தேவநாதன், ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.