மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை கைவிட கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக. 20 - அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி 4-ஆம் ஆண்டு பேரவை, திருவானைக் காவில் திங்கட்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு பகுதி தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் கணேசன் வர வேற்றார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் துவக்க உரையாற்றினார். மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் சுப்ரமணியன், சிஐடியு ஒருங் கிணைப்பாளர் ரகுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களுக்கு முறையான வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும். ஆன்-லைனில் அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். ஸ்ரீரங்கம் பகுதிக்கு முறையான அனுமதி பெற்ற வேன் ஸ்டாண்ட் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு புதிய தலைவராக ஏ.வி.ஆர்.மகேஷ், செய லாளராக டி.சுப்பிரமணியன், பொருளாளராக எ.ராமு உள்பட 11 பேர் கொண்ட பகுதிக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் நிறைவுரையாற்றி னார். ஸ்ரீரங்கம் பகுதி பொருளாளர் சீனி வாசன் நன்றி கூறினார்.