tamilnadu

img

விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி சிபிஐ விசாரணை கோரும் மனுக்கள் மீது நாளை தீர்ப்

விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி சிபிஐ விசாரணை கோரும் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு

புதுதில்லி, அக்.11- கரூரில் தவெக தலைவர் விஜய்-யின் பிரச்சாரத்தில்  41 பேர் நெரிசலில் சிக்கி பலி யான விவகாரத்தில் சிபிஐ  விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த ஜி.எஸ். மணி, பாஜக கவுன்  சிலர் உமா ஆனந்த் உள் ளிட்டோர் இதுதொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சிபிஐ விசார ணையை நேரடியாக கோரா மல், சுதந்திரமான விசா ரணை என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்  செயலாளர் ஆதவ் அர்ஜுனா வும் ஒரு மனுவைத் தாக் கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனை த்தும் நீதிபதிகள் ஜே.கே.  மகேஸ்வரி, என்.வி. அஞ்சா ரியா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தன.  அப்போது தவெக  சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் கோபால் சுப்பிரமணி யம், அரிமா சுந்தரம் ஆகி யோர் ஆஜராகி வாதாடி னர். தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்கி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகி யோர் ஆஜராகி வாதாடினர்.  இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த  வழக்குகளில், திங்கட்  கிழமை (அக்.13) அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.