tamilnadu

img

மலக்குழி மரணம்; தொடர்வது அவமானம்! பெ. சண்முகம் வேதனை

மலக்குழி மரணம்; தொடர்வது அவமானம்! பெ. சண்முகம் வேதனை

சென்னை, செப். 24 - திருச்சி மாநகராட்சி, திரு வெறும்பூர் பகுதியில் பாதாள சாக்கடைப் பணியில் ஈடுபடுத்தப் பட்ட பிரபு (32), ரவி (38) ஆகிய 2 இளைஞர்கள் விஷ வாயு தாக்கிப் பலியாகினர். இந்த துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் தமது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மனிதன் விண்வெளியில் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டுள்ளனர். இந்த  நிலையில் மலக்குழிக்குள் மனிதனை இறக்கி சுத்தம் செய்யும் மகா கேவலம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது” என்று வேதனை தெரிவித்துள் ளார். “இத்தகைய சட்டவிரோத மான நடவடிக்கையில் ஈடு பட்டவர்களை கைது செய்ய வும், மாண்டு போனவர்களின் குடும்பத்திற்கு சட்டப்படி யான இழப்பீடு பெறவும்- போராடினால் தான் கிடைக்கும் என்ற நிலை தொடர்வது மிக வும் அநியாயம்” என்று கூறியி ருக்கும் பெ. சண்முகம், “தூய்மைப் பணி யாளர் ஒப்பந்ததாரர்களை நம்பி இருக்கும் அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைவரும் போராடு வோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், “தூய்மைப் பணியாளர் களின் பணிப் பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு இரண்டையும் உறுதி  செய்ய தமிழக அரசும், முதலமைச்ச ரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.