tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அணைகள் நிலவரம் (திங்கட்கிழமை)

பவானிசாகர் அணை நீர்மட்டம்:101.83/105அடி நீர்வரத்து:4456 கனஅடி நீர்திறப்பு:3200 கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:158/160 அடி நீர்வரத்து:1194கனஅடி நீர்திறப்பு:1426கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.63/72 அடி நீர்வரத்து:2310க.அடி. நீர்திறபுப:2790கனஅடி ஆழியார் அணை  நீர்மட்டம்:118/120அடி நீர்வரத்து:606கனஅடி நீர்திறப்பு:728கனஅடி

கொலை வழக்கை சரியாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை, ஆக.12 கொலை வழக்கு ஒன்றில் சரியான விசாரணை மேற்கொள் ளாததால், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக் கையை டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவிட்டார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த  ஜெயராமன் என்பவர் சென்னையில் கொலை செய்யப்பட்டு,  அவரது உடல் காரில் கொண்டு வரப்பட்டு, கோவை மலுமிச் சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லுடன் கட்டி வீசப்பட் டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தக் கொலை  வழக்கு, விசாரணையில் தெரியவந்தது. கிணற்றிலிருந்து மீட் கப்பட்ட உடல் எலும்புக்கூடாக இருந்தது. இந்தக் கொலை தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர்  செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் ஆய்வாளர் லெனின்  அப்பாதுரை, செட்டிபாளையம் காவல் நிலையத்தின் ஆய்வா ளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.மேலும் விசாரணை யில், முருகப்பெருமாளுக்கு இந்தக் கொலை வழக்குடன்  தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இந்தக்  கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன்  மற்றும் பெனிட்டோ ஆகியோர் செய்ததாக விசாரணையில்  உறுதியானது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், கொலை வழக்கில் தொடர்பு இல்லாத முருகப் பெருமாளை முழுமையாக விசாரிக்காமல், அவரையும் வழக் கில் சேர்த்து கைது செய்தது உயர் காவல்துறை அதிகாரி களின் கவனத்திற்கு வந்தது. இது தொடர்பாக டி.ஐ.ஜி சசி  மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆய்வாளர் லெனின் அப்பாதுரை முரு கப்பெருமாள் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை  என்பது தெளிவானது. இதனைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி சசி  மோகன், ஆய்வாளர் லெனினை பணியிடை நீக்கம் செய்ய  உத்தரவிட்டார். கொலை வழக்கு விசாரணையில் ஏற்பட்ட இந்தக் குளறு படி மற்றும் ஆய்வாளரின் பணியிடை நீக்கம் ஆகியவை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்மண் கடத்தல் விவ காரம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

கோவை, ஆக.11- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம், தடாகம்  பள்ளத்தாக்கில் செங்கல் சூளைக்கு அளவுக்கு அதிக மாக மண் அள்ளப்பட்டு பள் ளங்கள் ஏற்பட்டுள்ளன. இத னால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேலான செங்கல் சூளைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலை யில், தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் பேரூர் தாலுகாவில் சட்ட விரோத மணல் கொள்ளை சம்பந்தமாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு  குழு (எஸ்.ஐ.டி) அமைக்கு மாறு சென்னை உயர் நீதி மன்றம் காவல் துறைக்கு  உத்தரவிட்டது. இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருகிறது. மணல் கொள்ளை விவகாரம் அதில் தொடர்புடையவர்கள் பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் உடந்தையாக இருந்த கனிம  வளம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம  நிர்வாக அதிகாரிகள் உள் ளிட்ட பல்வேறு விபரங்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சட்டவி ரோதமாக செம்மண் கடத் தலை உறுதிப்படுத்தும் வகையில், விசாரணை குழு தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப் பித்தது. அறிக்கையை தொடர்ந்து தற்பொழுது மாவட்ட ஆட்சியர் பவன் குமார், 40 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடுமை யான முறைகேடுகள், தவ றான நடத்தை, அலட்சியம்  மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான தமிழ்நாடு குடிமை பணி ஒழுங்கு மற் றும் மேல்முறையீடு விதிக ளின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.