பழனியில் மலைவாழ் மக்களின் பண்பாட்டுப் பேரணி
திண்டுக்கல், அக்.5- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பண்பாட்டுப் பேரணி பழனியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரியத்துடன் பங்கேற்றனர். பேருந்து நிலையம் முன்பிருந்து துவங்கிய பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தாகாரத், அகில இந்திய தலைவர் ஜிதேந்திர சௌத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், பொருளாளர் ஆ.பொன்னுச்சாமி, மாநிலத் துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மலைவாழ் மக்கள் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தா.அஜாய்கோஷ், மாவட்டத் தலைவர் ஏ.பாக்கியராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி, மாவட்டத் தலைவர் என்.பெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், மாவட்டத் தலைவர் பி.வசந்தாமணி, பழனி நகர்மன்றத் துணைத் தலைவர் கே.கந்தசாமி, வரவேற்புக் குழு பொருளாளர் கமலக்கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், டி.முத்துச்சாமி, பி.ஆஸாத், கே.ஆர்.பாலாஜி, இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பொதுக்கூட்டம் நடைபெறும் மின்வாரியத் திடலில் நிறைவு பெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார். இதில் பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
