tamilnadu

img

சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளில் சிபிஎம் வெற்றி!

சென்னை, பிப். 22- சென்னை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 5 வார்டுகளில் நான்கில் வெற்றிபெற்றுள்ளது.  திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் போட்டியிட்டார். மொத்தம் பதி வான 11,182 வாக்குகளில் ஜெயராமன்  3,337 வாக்குகள் பெற்று 515 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் செல்வம் 2,822 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். முன்னாள் கவுன்சிலர் சரவணன் 1,831 வாக்குகள் மட்டுமே பெற்று  3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எம். சரஸ்வதி வெற்றி சென்னை மாநகராட்சி 123 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில்  போட்டியிட்ட எம்.சரஸ்வதி  பதிவான 17,433 வாக்குகளில்  6,781 வாக்குகள் பெற்று 2,617 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் யாமினி 4,124 வாக்கு கள் பெற்று இரண்டாவது இடத்தை யும், பாஜக வேட்பாளர் ஸ்வப்னா மேரி 3,44, வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

விமலா

சென்னை மாநகராட்சி ஆர்.கே.நகர் 41ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பா. விமலா போட்டியிட்டார். மொத்தம் பதிவான 21,032 வாக்குகளில் விமலா  8742 வாக்குகள் பெற்று 3,064 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாமா 5,678 வாக்குகள் பெற்று இரண்டா வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் மோனிகா 2,145 வாக்கு கள் பெற்று 3ஆவது இடத்தையும் பிடித்தார்.

பிரியதர்ஷினி வெற்றி

98 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிட்ட பிரியதர்ஷினி பதிவான 16  ஆயிரத்தி 404 வாக்குகளில் 8651 வாக்குகள் பெற்று வெற்றிபெற் றார். இவர் 5253  வாக்குகள் வித்தியா சத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயந்தி அன்பரசுவை  வென்றார். 148 வது வார்டில் போட்டி யிட்ட சிபிஎம் வேட்பாளர் எஸ்.வெள் ளைச்சாமி அமமுகவேட்பாளர் கிரிதரணிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். கிரிதரன் 5014வாக்கு களும் அதிமுக வேட்பாளர் சதிஷ் 4 ஆயிரத்தி 197 வாக்குகளும் வெள்ளைச்சாமி 2747 வாக்குகளும் பெற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சி 28வது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஜி.விஜயலட்சுமி 129  வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கமலாவை வென்றார். விஜயலட்சுமி 1964 வாக்குகளும் கமலா 1835 வாக்குகளும் பெற்ற னர்.

 ஆவடி மாநகராட்சியில்  ஜான் வெற்றி

ஆவடி மாநகராட்சி 10ஆவது  வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தொகுதி  செயலாளர் அ.ஜான் பதிவான 3,536  வாக்குகளில் ன் 921 வாக்குகள்  பெற்று 289 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் மான்ராயன் 632 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், மணிகண்டன் 554 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அதிமுக முன்னாள் கவன்சிலர் தயாளன் 243 வாக்குகள் பெற்று 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.