சேலியாமேடு புதிய சுங்கச்சாவடியின் பணிகளை நிறுத்த சிபிஎம் வலியுறுத்தல்
புதுச்சேரி, அக்.15- நாகப்பட்டினம் முதல் விழுப்பு ரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாகூர் அருகில் சேலியாமேடு கிராமத்தில் அமைக்கப்படும் புதிய சுங்கச்சாவடி யின் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெரு மாள் தலைமையில், பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் ஆகியோர் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி னர். மனுவில், இந்திய சுங்கச்சாவடி விதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் 2008-ன் படி சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான தூரம் குறைந்தபட்சம் 60 கி.மீ. இருக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி மாநில எல்லை ஒட்டிய கெங்கராம்பாளையம் மற்றும் சிதம்பரம் கொத்தட்டை யில் சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த இரு சுங்கச்சாவடி களுக்கும் இடையில் சுமார் 70 கி.மீ. தூரம் உள்ளது. இந்நிலை யில் கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி யில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், கொத்தட்டை சுங்கச்சாவடியில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ள பாகூர் சேலியமேடு பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைப்பது நியாய மற்றது என்றும், சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சட்ட விரோத மாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி யுள்ளதை கருத்தில் கொள்ளாமல், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்திற்கு விரோதமாக சுங்கச்சாவடி அமைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியால் விவசாயிகள், சிறு குறு தொழில் செய்யும் கிராம மக்கள் என அனைவரும் மிகக் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் விரிசல், பாலங்களில் விரிசல், சரிந்து விழுவது போன்ற பிரச்சனைகள் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலையாக இல்லை என்றும், சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆட்சியருடனான சந்திப்பின்போது மாநில குழு உறுப்பினர் அ.இளவரசி, கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் இரா.சேகர், ப.குப்பம்மாள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
