சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்து குடும்பத்தினருக்கு சிபிஎம், தீ.ஒ.மு தலைவர்கள் ஆறுதல்
மயிலாடுதுறை, செப்.21 - மயிலாடுதுறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலை வருமான வைரமுத்துவின் குடும் பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர்கள் சனிக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினர். மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமத்திலுள்ள உயிரிழந்த வைரமுத்துவின் இல்லத் திற்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் த.செல்லக்கண்ணு, கே.முருகன், பழ.வாஞ்சிநாதன், ஆர்.கலைச்செல்வி, செ.முத்து ராணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ஒன்றியச் செய லாளர் டி.ஜி. ரவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.விஜய், மாவட்டச் செயலாளர் சி.மேகநாதன், லீலா வதி மற்றும் வாலிபர் சங்கத்தினர் வைரமுத்துவின் தாயார் ராஜ லெட்சுமி, சகோதரிகள், வைர முத்துவை திருமணம் செய்யவிருந்த, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த மாலினி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பெரும் இழப்பை சந்தித்து மீள முடியாத துயரத்தில் இருந்த வைர முத்துவின் தாயார், வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, “எனக்கு இரண்டு மகள்கள். எனது மகனுக்கு பதில் மூன்றாவது மகளாக மாலினி வந்திருக்கிறாள். அவரது விருப்பம்தான் எனது விருப்பம். அவர் என்ன நினைக் கிறாரோ, அதற்கு நான் என்றென்றும் துணை நிற்பேன்” என்று கூறினார். குடும்பத்தையே கவனித்து வந்த என் மகனை நினைத்து நினைத்து அதிர்ச்சியில் அவரது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அழுகை நிறைந்த வார்த்தைகளால் கூறினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தோழர் வைரமுத்துவின் தாயாரி டமும், அவரது குடும்பத்தாரிடமும், “வைரமுத்து இல்லை என்பதை தவிர, நாங்கள் எப்போதும் உங்க ளோடு இருக்கிறோம். என்றென்றும் நீங்கள் எங்கள் குடும்பம். நம் தோழர்கள் உங்களுடனே இருப்பார்கள், கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறி தேற்றினார். ஆறுதல் கூறி விட்டு, தோழர் வைரமுத்து தன் உழைப்பில் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிலிருந்து, தலைவர்கள் அவரை மனதில் நினைத்தவாறே புறப்பட்டுச் சென்றனர்.
