tamilnadu

img

எம்.ஏ. பேபி தலைமையில் சிபிஎம் குழு சீனா பயணம்!

எம்.ஏ. பேபி தலைமையில் சிபிஎம் குழு சீனா பயணம்!

புதுதில்லி, செப். 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, சீனத்தில் செப்ட ம்பர் 23 முதல் 30 வரை, ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறது.  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறை அழைப்பின் பேரில், இந்தப் பயணத்தை மேற் கொண்டுள்ள சிபிஎம் குழு, திங்கள் கிழமை இரவு பெய்ஜிங் கிற்கு புறப்பட்டுச் சென்றது.  குழுவில், பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியுடன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், ஜிதேந்திர சவுத்ரி,  ஆர். அருண் குமார், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. ஹேமலதா, சி.எஸ்.சுஜாதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இடையே, மார்க்சியத் தத்துவ நடைமுறை குறித்த அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த பயணத்திற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.  அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குழு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை யுடன் கலந்துரை யாடல்களையும் நடத்த உள்ளது.  (ந.நி.)