கோவில்பட்டியில் சிபிஎம் மாநிலக் குழு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செப்டம்பர் 18 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.