tamilnadu

img

கண்டியூரில் குடிநீர், சாலை வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கண்டியூரில் குடிநீர், சாலை வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப். 8-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் எதிரே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டியூர் கிளை சார்பில்  கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கண்டியூர் கடைத்தெரு பகுதியில் பயணிகள் நிழற்குடை, கழிப்பிடம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கதிரவன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.ராம், வெண்ணிலா, கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, வரதராஜன், கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.