சாலைப் பணிகளை விரைந்து முடித்திடுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கோவை, அக்.15- பீளமேடு பகுதியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் அவி நாசி மற்றும் சத்தி சாலைகளின் இணைப்புச் சாலையில், மாநக ராட்சி 24ஆவது வார்டு பகுதியில் உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் எஸ் பெண்டில் ரவுண்டானா அமைக்க மாநகராட்சியில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டும், நில எடுப்புப் பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை. உடனடியாக நிலத்துக் கான இழப்பீடு வழங்கி, ரவுண் டானா பணிகளை துரிதப்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முக்கியத்து வம் வாய்ந்த கொடிசியா முதல் என்ஆர்ஐ கார்டன் வரையிலான திட்ட சாலைப் பணிகளை உடனே தொடங்கிட வேண்டும். 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும், தொழிற்பேட்டை, டைடல் பார்க் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரும் 24ஆவது வார்டு பகுதியில் உள்ள பி.ஆர்.புரம், நேரு வீதி, கல்யாணசுந்தரம் வீதி, தண்ணீர் பந்தல் 8 குறுக்குச் சாலை மற்றும் குருசாமி நகர், அரங்கா நகர், சுப்பி ரமணியம் அவென்யூ பகுதிகளில் புதிய தார்ச்சாலைப் பணிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹோப் காலேஜ் ஜீவா வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் 24ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.அஜய் குமார், வி.தெய் வேந்திரன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் சி.ஜோதிமணி, தி.மணி, கே.பாண்டியன், நகரக் குழு செய லாளர் ஏ.மேகநாதன், 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கண் ணகி ஜோதிபாசு உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், நகரக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ஜெ. ஜெயபால் மற்றும் வாலிபர் சங்க நகரச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
