tamilnadu

img

திண்டிவனம் சாதிய வன்கொடுமை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்த கொடூர நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் டி.ராமதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி, மாநிலச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன், சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், முன்னணியின் மாவட்டத் தலைவர் எஸ். முத்துகுமரன், செயலாளர் எம்.கே. முருகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.