சிபிஎம் முதுபெரும் தலைவர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு தினம் கடைப்பிடிப்பு
நாகப்பட்டினம், ஆக.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் 28 ஆவது நினைவு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் பாங்கல் கிராமத்தில் அமைந் துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முருகை யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அம்பிகாபதி வேணு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜகுரு, மாவட் டக் குழு உறுப்பினர் ஏ.ராஜா, டி.அருள் தாஸ், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.