நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் கீரைத்துறை 86 ஆவது வார்டு பி. சாந்தி, அனுப்பானடி 88 ஆவது வார்டு ஜே. சகுந்தலா, சேர்மன் முத்துராம அய்யர் ரோடு 44 ஆவது வார்டு மதிமுக வேட்பாளர் க. தமிழ்ச்செல்வி, அனுப்பானடி ஹவுசிங் போர்டு 87 ஆவது வார்டு திமுக வேட்பாளர்கள் காளிதாஸ், லட்சுமிபுரம் 46 ஆவது வார்டு விஜயலட்சுமி பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிப்ரவரி 13 ஞாயிறன்று வாக்குச்சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மதிமுக தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச்செயலாளர் மா. கணேசன், முன்னாள மாமன்ற உறுப்பினர் மா. செல்லம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ, ரமேஷ், எஸ். அழகர்சாமி மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஞாயிறன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவை மாநகராட்சி 12 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வி.இராமமூர்த்தியை ஆதரித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., உரையாற்றினர்.