கண்மாயில் கூடுதலாக மண் அள்ளிய தனியார் நிறுவனம் சிபிஎம் தலைமையில் தடுத்து நிறுத்தும் போராட்டம்
சிவகாசி, ஆக.28 - சிவகாசி அருகே அருணாச்சல புரத்தில் உள்ள கண்மாயில் நிர்ணயம் செய்த அளவை விட அதிகமாக மண் அள்ளுவதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் தடுத்து நிறுத்தும் போராட்டத் தில் ஈடுபட்டனர். சிவகாசி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது அருணாச்சலபுரம். இங்குள்ள கடம்பன் குளம் கண்மாயில் சுற்றுச்சாலை பணிகளுக்காக மண் அள்ள மாவட்ட கனிம வளத்துறை தனியார் நிறுவ னம் ஒன்றிற்கு அனுமதி வழங்கியது. ஆனால் அந்நிறுவனமோ அரசு அனுமதித்த அளவை விட மிகவும் அதிகமாக மண் அள்ளும் பணியை செய்தது. இது குறித்து ஊர் மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மண் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. கால்நடை மற்றும் விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர். உடனடியாக ஊர்க் கூட்டம் நடைபெற்றது. அதில் கடம்பன்குளம் கண்மாயில் தனியார் நிறுவனம் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அருணாசல புரத்தில் மண் அள்ளுவதை தடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, மாநகர் செயலாளர் இரா.சுரேஷ் குமார், மாநகரக் குழு உறுப்பினர்கள் இரா. முத்துராஜ், பி.கனகராஜ், எம்.முத்துசாமி, பி.சண்முகராஜ், பாண்டீஸ்வரன் மற்றும் ஊர்த் தலைவர் அய்யனார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.