பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு சிபிஎம் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்
அறந்தாங்கி, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் ஒரு பெண்மணி கும்பல் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நபர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். தந்தை இல்லாத நிலையில் தற்போது தாயையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் அந்த குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி யினரும், மாதர் சங்கத்தினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் அரசு வேலை வழங்கி பாது காத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள னர். இந்நிலையில், அவ்விரு குழந்தைகளை யும் ஞாயிறன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.இராம கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமான வர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரண்டு மகள்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். எய்டு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் மளிகை பொருட்களை, அந்த குழந்தைகளுக்கு ஜி.இராமகிருஷ்ணன் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், எய்டு இந்தியா ராஜா மற்றும் கட்சியினர் உட னிருந்தனர்.