கண்ணூர், அக். 1- கட்சிக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல்கள் நடக்கும்போது, அவற்றையெல்லாம் எதிர்கொள்ள கோடியேரி பாலகிருஷ்ணன் இல்லையே என்கிற துயரம் மேலும் அதிகரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செய லாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். கேரள மக்கள் மற்றும் தோழர் களின் அன்புக்குரியவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராகவும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்ட, மறைந்த தலைவர் கோடியேரி பால கிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினை வுதின நிகழ்ச்சி அக்டோபர் 1 (ஞாயி றன்று) கண்ணூர் பையாம்பலத்தில் நடைபெற்றது. பையாம்பலத்தில் அமைக்கப்பட்ட கோடியேரி பாலகிருஷ்ணன் நினை விடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் மாநிலச் செய லாளர் எம்.வி.கோவிந்தன் பேசுகையில், “எந்தவொரு சிக்கலான பிரச்ச னையையும் திறம்படச் சமாளிப்ப தற்கான சரியான இலக்குடன் முன்னே றும் திறன் கோடியேரிக்கு இருந்தது. அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கையை அவர் மேற்கொண்டார். அவர் தனது திறமை, ஊக்கம் அனைத்தையும் கட்சிக்கு அளித்தார். ஒரு வருடம் மிக விரைவாக கடந்து விட்டது.
நாங்கள் ஏ.கே.ஜி. சென்டர் மற்றும் குடியிருப்பில் இருக்கும் போதும் அலுவலக அறையிலும், தோழர் கோடியேரி இருக்கிறாரா என் கிற ஒரு எதிர்பார்ப்பு எழும். எங்கும் அவர் இல்லாத மனத்துயரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓராண் டாக கோடியேரி இல்லாமல் கேரளா கடந்து செல்கிறது. கேரளாவில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் போராளியாக வும், அரசியல் தலைமைக்குழு உறுப் பினராகவும், மாநிலச் செயலாளராக வும், ஒட்டுமொத்த கேரள மக்களின் அன்பைக் கவர்ந்து புதிய மாதிரி நட்பை உருவாக்கினார். அவர் அனைவருடனும் ஒப்பற்ற தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அந்தத் தனிப்பட்ட உறவைப் பேண முயன் றார். ஒவ்வொரு செயலிலும் கோடி யேரியின் பங்களிப்பு உண்டு. கட்சிக்கு எதிராக பெரிய தாக்குதல்கள் வரு கின்றன. அதையெல்லாம் எதிர் கொள்ள கோடியேரி இல்லை என்ற உச்சக்கட்ட சோகத்தை கேரளாவில் உள்ள கட்சி சந்தித்து வருகிறது. கட்சி யைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட விச யங்களும் கோடியேரிக்கு இல்லை. தலைமை ஆசிரியராக, கேரளாவின் மிக முக்கியமான நாளிதழான தேசாபிமானி யை திறம்பட வழிநடத்தினார். இவ் வாறு எம்.வி.கோவிந்தன் கூறினார். முன்னதாக நடைபெற்ற நினைவு தின ஊர்வலத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.கே.ஸ்ரீமதி, கே. கே.சைலஜா, அமைச்சர் பி.ஏ.முஹம் மது ரியாஸ், மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன், பி.ஜெயராஜன், வி.சிவதாசன் எம்.பி உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த முன்னுதாரணம் கோடியேரி
கேரள முதல்வர் பினராயி உருக்கம்
“கோடியேரி பாலகிருஷ்ணன் அசாதாரண மன வலிமையும், துன்பங்களை துணிச்சலாக எதிர்கொள்ளும் கருத்தியல் உறுதி யும் கொண்டிருந்தார். அதனுடன் சிறந்த நிர்வாகி யாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்தி ரை பதிக்க அவரால் முடிந்தது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவரது சட்டசபை பேச்சுகளை ஒட்டுமொத்த கேர ளாவும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்ததால், உள்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. தோழர் கோடியேரியின் வாழ்க்கைப் பாதை, தியாகம், உறுதிப்பாடு, கட்சி மீதான நம்பிக்கைக்கு சிறந்த உதாரணங்களைக் காட்டுகிறது. கட்சி தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட போதெல்லாம் கட்சியை முன்னின்று பாதுகாத்த தோழர்களில் ஒருவர் அவர். அவர் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று நாம் முன்னேற வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.