tamilnadu

img

சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு சிபிஎம் உணர்ச்சிமிகு மரியாதை

மதுரை, ஜன. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம்  ஆகியவற்றின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் உணர்ச்சிமிகு மரியாதை செலுத்தப்பட்டது. தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் விடு தலைப்போராட்ட வீரர்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்தது. மேலும் குடியரசு தினத்தன்று கட்சியின் சார்பில் தமிழக முழுவதும்  விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு  பாராட்டு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறி வித்தது. இதனைத்தொடர்ந்து தமி ழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட தலைவர்கள் வீரத்தாய் வேலு நாச்சியர், அவரது  படை வீராங்கனை குயிலி, மாமன்னர்கள் மருது சகோ தரர்கள், செக்கிழுத்த செம்மல் வ. உ.  சிதம்பரனார், மகாகவி பாரதியார் ஆகி யோர் உருவப்பட மூகமுடி மற்றும் வேடம் அணிந்து குடியரசு தின பேரணி ஜனவரி 26 புதனன்று  மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கியது. முன்னதாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன்  மகாகவி பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் பேரணியை துவக்கிவைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி.  செல்வா, மாணவர் சங்க மாவட்டத் தலை வர் க. பாலமுருகன், செயலாளர் எஸ். வேல்தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டனர் .  சிம்மக்கல் பகுதியில் உள்ள வ. உ.  சிதம்பரனார் உருவச் சிலை, முனிச்சா லை காந்தி பொட்டல் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி உருவச் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது  சகோதரர்கள் உருவச்சிலை, விடு தலைப் போராட்ட வீரர் தோழர் பி. ராம மூர்த்தி சிலை ஆகியவைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 செய்தியாளர்களிடம்  கே. பால கிருஷ்ணன் கூறுகையில், இந்தியா வின் 73 ஆவது குடியரசு தின விழா  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தில்லியில் நடைபெறும் பேரணியில் ஒன்றிய பாஜக அரசு தமிழக அரசின் சுதந்திர போராட்ட வர லாற்று ஊர்தியை தவிர்த்துள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த மண்ணில் கால் வைத்த நாள் முதல்  வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரத்தாய் வேலு நாச்சியார் என பல்வேறு வீரர்கள், தலை வர்கள் நாட்டு விடுதலைக்காக தங் களுடைய இன்னுயிரை ஈந்துள்ளனர்.  நாட்டுக்காக பாடுபட்டவர்கள் இடம் பெற்ற ஊர்தியை குடியரசு தின நிகழ்ச்சி யில் இடம் பெற விடாமல் ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது.இதன்மூலம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எப்படிப் பட்ட நோக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

ஒன்றிய அரசின் இத்தகைய செயல்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள் மக்களை திரட்டி ஒன்று சேர்ந்து போராடக் கூடிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.  தஞ்சை பள்ளி மாணவி மரணத்தில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி பாஜக வினர் மதவாத அரசியலை தமிழ்நாட்டில்  பரப்ப நினைக்கின்றனர். இங்கு மத  வெறி சக்திகளுக்கு  இடம் இல்லை . இதில்  பாஜகவின் முயற்சி  படுதோல்வி  அடையும் என்று தெரிவித்தார்.

;