tamilnadu

img

மதுரை மாநகராட்சி சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

மதுரை, பிப்.7-  மதுரை மாநகராட்சி பகுதிகளில் திமுக  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் திங்க ளன்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். பெத்தானியாபுரம் 63வது வார்டு பகு தியில் போட்டியிடும் கு.கணேசன் வார்டுக்கு உட்பட்ட நாக நகர், சாமிகண்ணு வீதி, அண்ணா மெயின் வீதி, சின்னச்சாமி பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கட்சியின் வார்டு பொறுப்பாளர்களான மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.லெனின், எஸ்.அழகர்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா, பகுதி குழு உறுப்பி னர் வி.ராமர், எம்.கருத்த கண்ணன், திமுக வார்டு பொறுப்பாளர் ஜி.நாகராஜ், வார்டு நிர்வாகிகள் ஆர்.ஆசைத்தம்பி, இரா.தமிழ ரசன், காங்கிரஸ் நிர்வாகிகள் வெங்கடேஷ், கோவிந்தராஜன், மதிமுக நிர்வாகி டி.ஞானப் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். 23 ஆவது வார்டில் போட்டியிடும் டி.குமர வேல், 86 வது வார்டில் போட்டியிடும் பி.சாந்தி, 88 வது வார்டில் போட்டியிடும் ஜே. சகுந்தலா ஆகியோர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், பகுதி குழுச் செயலா ளர்கள் ஜெ.லெனின், ஏ.பாலு, வி.கோட்டைச் சாமி ஆகியோருடன் இணைந்து திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்.முத்து ராமலிங்கத்தை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். 56 வது வார்டு ஞானஒளிவுபுரத்தில் போட்டியிடும் வி.ஜென்னியம்மாள் வார்டுக்குஉட்பட்ட அழகரடி பகுதியில் வாக்கு சேகரித்தார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், திமுக நிர்வாகிகள் தவ மணி, லேத் சிவா, மதிமுக மாநில துணைச் செயலாளர் சுருதி ரமேஷ், திமுக அழகரடி சுருளி, சிபிஎம், மாதர் சங்க மூத்த தோழர் ப்ரீதி, பகுதி குழுச் செயலாளர் வை.ஸ்டா லின், பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.பாண்டி, உக்கிரபாண்டி, பாலமுருகன், சரவணக் குமார், சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.