tamilnadu

img

தூய்மைப் பணி தனியார்மயத்தைக் கைவிட வேண்டும் சென்னை மாநகராட்சியில் சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் போராட்டம் - வெளிநடப்பு

தூய்மைப் பணி தனியார்மயத்தைக் கைவிட வேண்டும் சென்னை மாநகராட்சியில் சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் போராட்டம் - வெளிநடப்பு

சென்னை, ஆக. 26 - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்தும், தனியார்மயத்தைக் கைவிட்டு, தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மன்றக் கூட்டம், செவ்வாயன்று (ஆக.26) மேயர் ஆர். பிரியா தலைமை யில் நடைபெற்றது.  மாநகராட்சியில்  விவாதிக்க கோரிக்கை இந்தக் கூட்டம் தொடங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழுத் தலைவர் ஆர். ஜெய ராமன், அறவழியில் ஜனநாயக ரீதியாக  போராடிய துய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது குறித்து பிரச்சனையை எழுப்பினார்.  சிபிஎம், சிபிஐ உறுப்பினர்கள் எழுந்து நின்று இந்த பிரச்சனையை விவாதிக்க கோரினர். அதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக ஏற்கெனவே தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு  நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.  துணைமேயரின்  கண்ணியமற்ற பேச்சு அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மு. மகேஷ்குமார், “உங்கள் கருத்தை சொல்லிவிட்டு நீங்கள் புறப்படலாம். அரசியலுக்காக பேச வேண்டாம்” என்று கண்ணியமற்ற வார்த்தையை பயன்படுத்தினார்.  இதற்கு கண்டனம் தெரிவித்த சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள், தூய்மைப் பணிகள் தனியார்மயத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ‘தூய்மைப்பணியாளர்களை நிரந்த ரம் செய்ய வேண்டும்’ என்றும் முழக்கமிட்டபடி, தனியார்மயத்திற் கான தங்களின் எதிர்ப்பைத் தெரி விக்கும் வகையில் வெளிநடப்பு செய்த னர். தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு கண்டனம் இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். ஜெயராமன், “மாநகராட்சி யில் எந்தப் பணிகளிலும் தனியார்மயம் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கடைநிலை ஊழியர்களை ஒப்பந்தமுறைக்கு மாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல் லது என்யுஎல்எம் தொழிலாளர்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், அவர்களை நள்ளிரவில் கைதுசெய்தது ஜனநாயக நடைமுறையல்ல! இதனை மாமன்றக் கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.  தொழிலாளர் ஆதரவு நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது ஏன்? ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நிறைவேற்றாத வர்கள்- கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அதை அமல்படுத்த மறுப்பவர்கள்- தொழி லாளர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை  மட்டும் வேகவேகமாக அமல்படுத்து கிறார். இதனை ஏற்க முடியாது என்று கூறினோம். “நவீன தாராளமயக் கொள்கை, சுரண்டலை அதிகரித்து கொள்ளை லாபத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக் கிறது. மாநகராட்சி தூய்மைப் பணியை ஒப்பந்த முறைக்கு மாற்றுவதில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் பேதமின்றி செயல்படுகின்றன. அதிமுக ஆட்சியில்  துவங்கிய பிரச்சனை அதிமுக ஆட்சிக் காலத்தின் போது, 2013-இல் சுவர்ண ஜெயந்தி ரோஜ்கர் யோஜனா என்ற பெயரில் தூய்மைப் பணிகள் சுய உதவிக் குழுக் களுக்கு வழங்கப்பட்டன. அதில் ஊழல் நடந்ததையடுத்து, மாநக ராட்சியே நேரடியாக ஊதியம் வழங்கக் கோரி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் போராட்டம் நடத்தி யது. இதனையடுத்து 2016-இல் என்யு எல்எம் என்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டு மாநகராட்சியே நேரடி யாக ஊதியம் வழங்கியது. இதனால் அதிகாரிகள், ஆட்சியில் இருந்தவர் களுக்கு வருவாய் தடைபட்டது.  எனவே, 2020-க்குப் பிறகு படிப்படி யாக 11 மண்டலங்களை  தனியாருக்கு கொடுத்தனர். 4, 5, 6, 8 ஆகிய நான்கு மண்டலங்களில் என்யுஎல்எம் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, 5, 6 மண்டலங் களை தனியாருக்கு கொடுக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. 4 மற்றும் 8 ஆகிய இரு மண்டலங்களை தனியா ருக்குக் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் ரூ. 10 ஆயிரம் இழப்பு தூய்மைப் பணி தனியார்மய மானால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படு கிறது. 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே