தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!
சென்னை: மாநில திருநங்கையர் கொள்கையை கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 7 ஆவது மாநிலமாக திருநங்கையர் கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. LGBTQIA PLUS சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும். திருநங்கைகளுக்கு என உள்ள பிரத்யேக செயலியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. அரசு தரப்பில் பதில்தர உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.