tamilnadu

img

மதரீதியான வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது...

மதுரை:
மதரீதியான வழிபாடுகளில் நீதிமன்றம்தலையிட முடியாது என்று கூறி, ரம்ஜான்சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கை க்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புஅளித்து வருகின்றனர். மே 25 ஆம் தேதிஇஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது. இந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கு மாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது உயர்நீதிமன்றம். மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

;