மதுரை, ஜூன் 25- கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிப்லா, ஹெட் டேரோ நிறுவனங்கள் தயாரித் துள்ள தடுப்புமருந்தை சந்தைப் படுத்த இந்திய ஒழுங்குமுறை மருத்துவ கட்டுப்பாட்டுத்துறை ஜெனரல் ஒப்புதல் வழங்கியுள் ளார். இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 72 ஆயிரத்து 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் பலி யாகியுள்ளனர். அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிரா, தில்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ளது. இந்த நிலையில் ஹைதரா பாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹெட்டேரோ நிறு வனம் ரெம்சிடிவீர் மருந்தை சந் தைப்படுத்த ஒப்புதல் பெற்றுள் ளது. இந்த மருந்து மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங் களுக்கு அனுப்பப்பட உள்ளது. தெலங்கனா மாநிலம் ஹைதரா பாத்திலும் இந்த மருந்து கிடைக் கும். கொரோனா தடுப்பு மருந்து கோவிஃபேர் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு வாரங்களில் ஹெட்டேரோ மூன்று லட்சம் மருந்து குப்பி களை தயாரிக்குமென எதிர்பார்க் கப்படுகிறது. இரண்டாம் கட்ட மாக போபால், லக்னோ, புவ னேஷ்வர், திருவனந்தபுரம், விஜயவாடா, கொச்சி, கோவா விற்கும் அனுப்பப்படவுள்ளது. முதற்கட்ட மருந்து தொகுப்பை குஜராத், தமிழகம் பெறுகிறது. கொரோனா தொற்றால் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு ஆறு குப்பி மருந்து தேவைப்படும். 100 மில்லிகிராம் கொண்ட ஒரு குப்பியின் விலை ரூ.5,400 என வெட்டேரோ நிறு வனம் நிர்ணயம் செய்துள்ளது. சிப்லா நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் விலை ரூ.5 ஆயிரத்திற் கும் குறைவாக இருக்குமென கூறப்படுகிறது. ஹெட்டேரோ நிறுவனம் மகா ராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு 20,000 குப்பி களை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவிஃபேர் மருத்துவமனை கள், அரசு மூலமாக மட்டுமே கிடைக்கும். சில்லறைக்கு கிடைக் காது என ஹெட்டேரோ குழும நிறு வனங்களின் மேலான் இயக்குநர். வம்சி கிருஷ்ணா பாந்தே தெரி வித்துள்ளார்.