tamilnadu

கொரோனா பரிசோதனை: புதிய நெறிமுறைகள்

சென்னை,பிப்.17- தமிழகம் முழுவதும் கொ ரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதில், சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திண றல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்டவர்கள் கொரோனா  பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், 60 வயதிற்கு மேற் பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, உடல் பருமன் அதிகம் கொண்டவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர் களில் 2 சதவீதம் பேருக்கு  ரேண்டம் முறையில் பரிசோ தனை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.