கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஆக 1- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தமிழ்நாடு நியாயவிலைக் கடை ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் என்.செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்தை தனித் துறை ஆக்க வேண்டும். கருணை ஓய்வூதி யத்தை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.செல்வம், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொழிலாளர் சங்க மாநில துணைச் செய லாளர் பி.கலைவாணன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.செல்வ ராஜ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.