tamilnadu

img

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக! தென்சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கட்டுமானப் பொருட்களின்  விலை உயர்வை கட்டுப்படுத்துக! தென்சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 10 - கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழி லாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 16வது மாநாடு ஞாயிறன்று (ஆக.10) கிண்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் இ.மூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு கொடியை மாவட்டக்குழு உறுப்பினர எஸ்.குருமூர்த்தி ஏற்றினார். விருகை பகுதிச் செயலாளர் ஏ.செல்வராஜ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாநிலக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜன் வேலை அறிக்கையும், பொருளாளர் பி.சுப்பிரமணி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் பி.லூர்துசாமி, மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.மார்டினும் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார் நிறைவுரையாற்றினார். ஏ.கங்காதரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் இந்த மாநாட்டில், நலவாரிய ஆன்லைன் பதிவு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். நலவாரிய பணப்பயன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், வீடுகட்டும் திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல், ஜல்லி, செங்கல், சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், நலவாரியத்தில் வழங்கப்படும் உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக ஏ.நடராஜன், செயலாளராக பி.சுப்பிரமணி, பொரு ளாளராக இ.மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.