tamilnadu

img

இதய பாதிப்பு: இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை

சென்னை, மார்ச் 22- ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் கொரோ னாவிலிருந்து மீண்டுவிட்டதாகவும், இதய பாதிப்புக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை போரூரிலுள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளங்கோவன் குணமடைந்து வருவதாகவும், இரண்டு நாளில் வீடு திரும்புவார் எனவும்  மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், இதய  பாதிப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈவி கேஎஸ் இளங்கோவன் கொரோனா  பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டார். இதய பாதிப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.