ஆக.12 - இல் மனு வழங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக 1- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க திருச்சி உட்கோட்ட 9 ஆவது மாநாடு வெள்ளி அன்று திருச்சியில் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாநாட்டிற்கு சங்க உட்கோட்ட தலைவர் தேவானந்தம் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை வட்ட துணைத்தலைவர் சுருளிமோகன் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் துவக்க உரையாற்றினார். செயலாளர் அறிக்கையை உட்கோட்ட செயலாளர் மருதை வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை உட்கோட்ட பொருளாளர் சரவணன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் பால்பாண்டி, சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாவட்ட தணிக்கையாளர்கள் கருப்பண்ணமூர்த்தி, சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், மலர்மன்னன், மாவட்ட இணைச் செயலாளர் சௌந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் ஆக. 12 ஆம் தேதி கோரிக்கை மனு வழங்கி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் உட்கோட்ட துணைத்தலைவர் தினகரன், இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உட்கோட்ட தணிக்கையாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.