சென்னை,ஜன.28- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஜன.27 அன்று தொடங்கியது. ஒமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை யில் நடந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்புப் பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டனர். அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான 7.5 விழுக்காடு உள்ஒதுக் கீட்டுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமையும், சனிக்கிழ மையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான கலந்தாய்வு ஓமந்தூரர் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. மொத்தம் 1,806 பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 819 தர வரிசையில் உள்ளவர்களுக்கு முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் கலந்தாய்வில் பங்கேற்க மாண வர்கள் காலையிலேயே அங்கு குவிந்தனர்.