tamilnadu

img

கன்னையா லால் கொலை குற்றவாளி பாஜக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்?

புதுதில்லி, ஜூலை 2- தையல் தொழிலாளி கன்னையா லால் படுகொலை குற்றவாளி களில் ஒருவர், பாஜக-வின் சிறு பான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் செய்திப் பிரிவுத் தலை வர் பவன் கேரா புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் பவன்கேரா குறிப் பிட்டுள்ளார். முகம்மது நபிகளை அவதூறு செய்த பாஜக செய்தித் தொடர்பா ளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரி வித்தவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் (40)ஆவார். தையல் தொழி லாளியான இவர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி படுகொலை செய்யப்  பட்டார். இச்சம்பவத்தில் தொடர்பு டைய 2 பேரை போலீசார் உடனடி யாக கைது செய்தனர். இந்த  கொலையாளிகள் இஸ்லாமியர்கள் என்பதால், அதை வைத்தே, பாஜக வினர் ராஜஸ்தானில் கலவர முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு  அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல்  வரவுள்ளதும் கலவர முயற்சிக்  கான காரணங்களில் முக்கியமான தாகும். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கேரா தில்லியில் செய்தியா ளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், கன்னையா லால்  படுகொலையில் கைது செய்யப் பட்டிருக்கும் ரியாஸ் அத்தாரி, ராஜஸ்தான் மாநில பாஜக சிறு பான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்ற  பரபரப்பு தகவலை வெளியிட்டுள் ளார். இதன் காரணமாகவே ஒன்றிய  பாஜக அரசு, இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்துவிடக் கூடாது என்பதற்காக, அவசர அவ சரமாக என்ஐஏ விசாரணைக்கு மாற்றியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கன்னையா லாலை கொலை  செய்த குற்றச்சாட்டில் கைதாகி யுள்ள இருவரில் ரியாஸ் அத்தாரி  பிரதான குற்றவாளியாக கருதப்படு கிறார். இவர் பாஜக சிறுபான்மை பிரிவில் இருக்கிறார். அதற்கான புகைப்பட ஆதாரம் மற்றும் முக நூல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.  பாஜக தலைவர்கள் இர்ஷத்  சயின்வாலா, முகமது தாஹிர் ஆகி யோருடன் ரியாஸ் அத்தாரி நெருங்  கிய தொடர்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவ ரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சி களில் எல்லாம் ரியாஸ் அத்தாரி தவ றாமல் கலந்து கொண்டுள்ளார்.

இர்ஷத் சயின்வாலா கடந்த 2018 நவம்பர் 30ல் பகிர்ந்த முக நூல் பதிவு, முகமது தாஹிர் 3 பிப்ரவரி 2019, 30 நவம்பர் 2018, 27 அக்டோபர் 2019, ஆகஸ்ட் 10 2021, நவம்பர் 28 2019 மற்றும் இன்னும் பிற பதிவுகளில் அத்தாரி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிவந்தது அம்பலமாகியுள்ளது. உதய்பூர் சம்பவத்தில் பிரத மர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காக்கும் மவுனம், ஒருவேளை நாட் டில் மதமோதல்களை உருவாக்க பாஜக முயல்கிறதோ என்ற எண்  ணத்தை உருவாக்குகிறது. அதே போல் பாஜக தனது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மூலம் நாட்டை பிரித்தாள முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.  அத்தாரிக்கும் பாஜக-வுக்கு மான தொடர்பை எல்லாம் மூடி மறைக்கவே ஒன்றிய அரசு அவசர  அவசரமாக வழக்கு விசாரணை யை என்ஐஏ-க்கு மாற்றியதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இவ்வாறு பவன் கேரா கூறி யுள்ளார். ஆனால், “பயங்கரவாதம், தேசப் பாதுகாப்பு விஷயங்களில் இதுபோன்ற முட்டாள் தனங்களை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பாஜக செய்தி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

;