பாகிஸ்தான் தாளத்திற்கு காங்கிரஸ் பாடிக்கொண்டிருக்கிறதாம்! அசாமில் பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு
126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்., 9 அன்று சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பார்பெட் டா மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில்,”பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தனது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ அண்டை நாட்டின் தாளத்திற்கு ஏற்ப பாடிக்கொண்டிருக்கி றது. காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் உடனான தொடர்பு இந்தியாவின் பாது காப்பைப் பாதிக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த மறுப்பதன் மூலம் காங்கி ரஸ் ராணுவத்தைப் புறக்கணிக்கிறது. தேசத்தைப் பாதுகாப்பவர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜக உறுதி செய்துள் ளது. வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்த வரை, காங்கிரஸ் எப்போதும் குறுகிய கால நோக்கிலேயே செயல்பட்டுள்ளது” என அவர் வெறுப்புப் பேச்சைக் கக்கினார்.
