tamilnadu

img

திரிபுராவில் “இந்தியா” கூட்டணி தொகுதி பங்கீடு சிபிஐ(எம்), காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

அகர்தலா, மார்ச். 18- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரி புராவில் மக்களவை தேர்தல் இரண்டு கட்ட மாக (ஏப்ரல் 19, ஏப்ரல் 26) நடைபெற வுள்ள உள்ளது. மக்களவை தேர்தலுடன் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத் தேர்தல் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகியவை “இந்தியா” அணியை அமைத்து மக்களவை மற்றும் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.  இந்நிலையில், “இந்தியா” அணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகர மாக நடைபெற்றது. இதில் திரிபுரா கிழக்கு (எஸ்டி) மக்களவை தொகுதி மற்றும் ராம்நகர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலை யில், கிழக்கு திரிபுரா (எஸ்டி) தொகுதி வேட்பளராக ராஜேந்திர ரியாங், ராம்நகர்  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக ரத்தன் தாஸ் ஆகியோரை வேட்பாளராக சிபிஐ(எம்) அறிவித்துள் ளது. திரிபுரா மேற்கு மக்களவை தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் ஆசிஷ் குமார் சாஹா வேட்பாளராக களமிறங்குகிறார்.

;