வாக்கு திருட்டை நிறுத்தக் கோரி காங். கையெழுத்து இயக்கம்
தஞ்சாவூர், செப். 16- நாடு முழுவதும் வாக்கு திருட்டை உடனடியாக நிறுத்தக் கோரி தஞ்சாவூர் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜேம்ஸ், வயலூர் எஸ்.ராமநாதன், துணைத் தலைவர் ஜி.லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆர்.பழனியப்பன், பொதுச் செயலர் கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
