தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு கண்டனம்
உச்சநீதிமன்றதலைமை நீதிபதி மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி கடலூர்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்புதுச்சேரி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.  திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம், விசிக வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்திகேயன், அகில இந்தியவழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள்  தட்சிணாமூர்த்தி, சுபாஷ், லீலாவதி உட்பட திரளான வழக்கறிஞர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில்முன் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்குரைஞர் கிஷோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலர் எஸ்.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் காமராஜ், மணிவண்ணன், வைத்திலிங்கம், ஆழ்வார், வழக்குரைஞர்கள் ஆர்.செல்வகுமார், வேல் ராமலிங்கம், பீமாராவ், கார்ல்மார்க்ஸ், கண்ணன், டி.செல்வகுமார், அம்பேத்கர், ராஜாராமன், இனியராஜா, ரமேஷ், விஜயகுமார், ஜெயச்சந்திரன், சங்க துணைச் செயலாளர் அதியமான் ஆகியோர் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியின் மீது செருப்பு வீசியதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்தியவழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் திண்டிவனம் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
                                    