tamilnadu

img

தோழர் டி.முருகேசன் இல்லத் திறப்பு விழா

தோழர் டி.முருகேசன் இல்லத் திறப்பு விழா'

மன்னார்குடி, ஆக.20 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம் நீடா மங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் டி. முருகேசனின் தென் கரைவயல் அருள்நக ரில் இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. இல்லத்தை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னதுரை இல்லத்தை திறந்து வைத்தார்.  விழாவிற்கு நீடாமங்கலம் ஒன்றியச் செய லாளர் டி.ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச்செயலாளர் டி.முருகை யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பி.கந்தசாமி, என்.ராதா, ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் பி.காளியப்பன், டி.அண்ணா துரை பி.ராஜேந்திரன், எம்.குருமூர்த்தி, வாலி பர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.ராஜா,  ஜெ.ராபர்ட் ப்ரைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   முன்னதாக கட்சிக் கொடியை மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் இல்லத்தின் வாயிலில் ஏற்றி வைத்தார். டி.முருகேசன் நன்றி கூறினார்.