tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: உடல்தான இயக்கம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: உடல்தான இயக்கம்

திருச்சிராப்பள்ளி, செப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மகத்தான மார்க்சிய அறிஞருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைந்து ஓராண்டு நிறைவடைந்தது. இதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் முதலாமாண்டு புகழஞ்சலி நிகழ்வுகள், உடல் தானம், கண் தானம் பத்திரம் வழங்கும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை திருச்சி பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில், இந்திய மாணவர் சங்க புறநகர் மாவட்டக் குழு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.  திருச்சி ரஞ்சிதபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு அலுவலகத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொன்மலை பகுதிச் செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், பகுதிக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி, சீனிவாசன், லட்சுமணன் செவ்வணக்கம் செலுத்தினர். திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு சார்பில், கண்தானம் மற்றும் உடல்தானம் உறுதிமொழி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி திருவெள்ளரை கடைவீதியில் நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜிடம்  தோழர்கள் 21 பேர் உடல் தானத்திற்கான உறுதிமொழி பத்திரத்தை வழங்கினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூர் வட்டக் குழு, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் மற்றும் பெல் சிஐடியு சார்பில் பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம் மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.  புதுக்கோட்டையில் 14 பேர் உடல் தானம்  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு புகழஞ்சலி கூட்டத்திற்கு, புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கவிஞர் நா.முத்துநிலவன் உட்பட 14 பேர், கண், மற்றும் உடலை தானம் செய்வதாக ஒப்புதல்  அளித்து அதற்கான படிவத்தை வழங்கினர். கறம்பக்குடியில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் துரை.அரிபாஸ்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மகாதீர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியக் குழு சார்பில், ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில், மரியாதை செலுத்தப்பட்டது. பூதலூர் வடக்கு ஒன்றியம்  பூதலூர் வடக்கு ஒன்றியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முல்லைக்குடி கிளையில், கட்சிக் கொடியேற்றி, தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய அமைப்புக் குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், வழக்கறிஞர் எம்.கே.சேகர், மூத்த தோழர் துரைராஜ், கிளைச் செயலாளர் தர்மராஜ், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியிலும் தோழர் சீத்தாராம் யெச்சூரி  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  திருவாரூர் சிபிஎம் குடவாசல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி செங்கொடி ஏற்றி வைத்து தோழர் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி, மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. ஜெகதீஸ்வரி மற்றும் கட்சியின் ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர்.  மன்னார்குடி மன்னார்குடி நகரக் குழுவின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், மாதர் சங்கத்தின் செயலாளர் சகாயராணி, தமுஎகச தலைவர்கள் வி. கோவிந்தராஜ், கே. அகோரம். கே. பிச்சைக்கண்ணு, விவசாயிகள் சங்கப் பொருளாளர் ஜி. மாரிமுத்து, நகர ஒன்றியக் குழு உறுப்பினர்கள், சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.