tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம் 2502 மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம்  2502 மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு

புதுக்கோட்டை, செப். 22-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மார்க்சிய அறிஞருமான தோழர்  சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு  நினைவு மண்டல கருத்தரங்கம் மற்றும் ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழ் சந்தா வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வு க்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர்கள்  சின்னை. பாண்டி யன் (தஞ்சாவூர்), பி.சீனிவாசன் (மயி லாடுதுறை), கே.சிவராஜ் (திருச்சி புற நகர்), எம்.இளங்கோவன் (அரியலூர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன்(திருவாரூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் ஏ.அன்வர் உசேன் நோக்க உரையாற்றினார். கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். அவரிடம் 2502 மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான சந்தா தொகை ரூ.4,00,320 வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.சச்சி தானந்தம் எம்பி., எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் உரையாற்றி னர். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் வரவேற்க, மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் நன்றி கூறினார். கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செய லாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.