tamilnadu

img

தோழர் அசோக் நினைவு தினம்

தரங்கம்பாடி, ஜூன் 12- நாகை மாவட்டம், இலுப்பூர் சங்க ரன்பந்தலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தோழர் அசோக் நினைவு தினத்தையொட்டி கொரோனா பாதிப்பை தடுத்திட இரத்ததான முகாம் சங்க வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலை மையில் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் கே.பி மார்க்ஸ் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவ மனை இரத்த வங்கி மருத்துவர் சிவக்குமார் முகாமை துவக்கி வைத்தார். வட்ட பொருளாளர் சாமித்துரை, துணை செயலாளர் பவுல் சத்தியராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 56 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப் பட்டது. நிறைவாக ஆசிக் ரகுமான் நன்றி கூறினார். மேலும் திருக்கடை யூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட 13 இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழர் அசோக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.