அதிக கட்டணம் வசூல் ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடிக்க குழு அமைப்பு
சென்னை: மிலாடி நபி மற்றும் வார விடுமுறையை யொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்த நிலையில், அதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்களை கொண்டு சிறப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதி யின்றி இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்கு வரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.