tamilnadu

img

தமிழ்நாடு பால் கூட்டுறவுக் கொள்கை

சென்னை, ஆக.4- தமிழ்நாட்டில் பால்வளத் துறை யின் கீழ் செயல்படும் பால் கூட்டுறவு  அமைப்புகளுக்கான பால் கூட்டு றவு கொள்கை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தெரி விக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக் கப்படும் என்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி ஒழுங்குமுறை மற்றும் பால்கூட்டுறவு சட்டம் அறி முகப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் பால்வளத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற் கென தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உரு வாக்கப்படும். தமிழ்நாட்டில் பால் கொள்முதலை வரைமுறைப் படுத்தவும், உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்கவும், வளர்ந்து  வரும் தரக் கட்டுப்பாடு தொழில் நுட்பங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவும், பால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடையாமல் லாபகர மாக இயங்குவதை உறுதிசெய்யும் வகையில் பால் கூட்டுறவு சட்டம்  இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படும். மேற்படி அறிவிப்பினை நடை முறைப்படுத்தும் பொருட்டு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரி விக்க விரும்பினால் ஆணையர் அலுவலகம், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை – 600 051 என்ற முகவரி யில் கருத்துக்களை 25.08.2023-க்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.