‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர், எம்எல்ஏ., பங்கேற்பு
புதுக்கோட்டை, ஆக. 7- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கிள்ளுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் பேசும்போது, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கிள்ளுக்கோட்டை பகுதியில், நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில் இன்றையதினம் கலந்துகொண்டு, மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்களை கேட்டறியப்பட்டது. மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களும், மின்னணு குடும்ப அட்டைகளும் இன்றையதினம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் 29 முகாம்களும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 10 முகாம்களும், பொன்னமராவதி, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் அரிமளம் ஆகிய 8 பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு வீதம் 16 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 151 முகாம்களும், பெரிய நகரங்களில் 7 முகாம்களும் ஆக மொத்தம் 213 முகாம்கள் 15.07.2025 முதல் 21.10.2025 வரை நடத்தப்பட உள்ளன என்றார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.