கேரம் போட்டியில் மாநில அளவில் கோவை பெண் முதலிடம்
கோவை, அக்.15- முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டி களில் சேலத்தில் நடைபெற்ற கேரம் இரட்டையர் போட்டி யில், கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆ. ரோஸ்லின் வாழ் டினா மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கோவை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற இவர், திங்களன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். இதனைத்தொ டர்ந்து, செவ்வாயன்று, சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து வெற்றிச் சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்டார். கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதுநிலை நிர்வாக அலுவலராக ரோஸ்லின் வாழ்டினா பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஆல்ட்ரின் ஜோசப் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருந்தாளுனராகவும், தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாள ராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முதல்வர் கோப்பைக்கான இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி கோப்பையைப் பெற்று அசத்தி யுள்ளது.
