tamilnadu

img

நலவாரிய அலுவலகப் பணிகளுக்கு முக்கியத்துவம் தர சிஐடியு வலியுறுத்தல்

நலவாரிய அலுவலகப் பணிகளுக்கு  முக்கியத்துவம் தர சிஐடியு வலியுறுத்தல்

கரூர், செப்.2 - வீடு கட்டும் திட் டத்தில், ஆய்வு  முடித்த மனுக் களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் வழங்க வேண்டும்.  மரண உதவித் தொகை மனுக்களை தாமதப்படுத்துவதை கைவிட வேண்டும். திருமண உதவித் தொகை மனுக்களுக்கு கிராம நிர்வாக அலு வலர் ஒப்புதலை தவிர்த்து தொழிற்சங்க ஒப்பு தலை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் அலுவலகப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் திருமணம், பென்சன், வீடுகட்டும் திட்டத்தில் நிதி வழங்கிட அங்கீகரிக்கப்பட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கணக்கில் பணப் பயன்களை வழங்காமல் அலைக் கழிப்பதை கைவிட்டு, உடனடியாக பணப் பயன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் செவ்வா யன்று நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராகினர்.  அப்போது நலவாரிய அதிகாரி பேச்சு வார்தை நடத்தி, விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சரணவன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணின், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் நலவாரிய அதிகாரியிடம் நடத்திய பேச்சுவார்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கி பேசினர்.