tamilnadu

img

35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆலையை மூட எதிர்ப்பு சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம்

35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆலையை மூட எதிர்ப்பு சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம்

சேலம், ஜூலை 8- சேலத்தில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த  தனியார் எலக்ட்ரானிக்ஸ் ஆலையை மூடும் முடி விற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், புது ரோடு அருகே உள்ள  வெளிநாட்டு நிறுவனமான தலைமா எலக்ட்ரானிக் இந்தியா பிரைவேட் நிறுவனத்தில் 500க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 35  ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம்  தற்போது மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யது. தொழிற்சாலை நிர்வாகத்தின் இந்த முடிவை  கண்டித்தும், தொழிற்சாலையை பார்வையிட தில்லி யிலிருந்து அதிகாரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித் தும், சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, தொடர்ந்து தங்களுக்கு பணி வழங்க  வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆலை நிர்வாகத்தின் செயலை மாற்றிக் கொண்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர்ந்து ஆலையை  செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். இப்போராட்டத்தில் சிஐடியு ஆலை சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட  திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.