சென்னை,டிச.3- டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் செயல்படும் நேரத்தை மாற்றியுள்ளதற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ( சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்மே ளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல் வன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை களின் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என இருப்பதை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றி அவசரகதியில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு டிசம்பர் 31 வரை நீடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் 15 வரை கட்டுப்பாடுகள் நீடிக் கப்படுவதாக முதலமைச் சர் அறிவித்துள்ளார். ஆனால், மேலாண்மை இயக்குனர் இதனை கவனத்தில் எடுத்து கொள்ளாமலும், ஒமிக்ரான் என்கிற உருமாறிய கொரோனா தொற்று ஆபத்தை கருத்தில் கொள் ்ளாமலும் நேரத்தை மாற்றி யமைத்தற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தற்போது நடைமுறை யில் உள்ள கடைகளின் விற்பனை நேரத்திலேயே சமூகவிரோதிகளால் ஊழியர்கள் தாக்கப்படு வதும், கொலை செய்யப் ்படுவதும் அதிகரித்துள்ளது. இந் நிலையில் இரவு 10 மணி வரை கடைகள் செயல் ்படும் போது கணக்குகளை முடித்து 1 மணி நேரம் கூடு தலாக கடையில் இருக்க வேண்டிய ஊழியர்கள் வீடு திரும்ப பொது போக்கு வரத்து இருக்காது. இதனால் சமூகவிரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கும் ஆபத்தையும் டாஸ்மாக் நிர்வாகமும், அரசும் உணரவில்லை. டிசம்பர் 15 வரை கட்டுப் பாடுகள் நீடிப்பதாக அறிவித்துள்ள முதலமைச் ்சரின் அறிகையில், செயல்பட அனுமதித்துள்ள அனைத் ்துக் கடைகளிலும் நிலை யான வழிகாட்டு நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை டாஸ்மாக் நிர்வாகம் வழங்கவில்லை என்பதை முதமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு வரு கிறோம். நிர்வாக நடவடிக்கை களில் மாற்றத்தை உரு வாக்கும் போது ஊழியர்கள் தரப்பு கருத்துக்களை ஆலோசனைகளை பெறு வதற்கு தொழிற்சங்கங் ்களின் கூட்டத்தை நடத்தி யிருக்க வேண்டும். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரின் தன்னிச்சையான அணுகு முறையால் அரசுக்கு அவப் ்பெயரையே ஏற்படுத்தும் என்பதையும், ஊழியர் ்களுக்கு ஏற்பக்கூடிய சிரமங்களையும் முதலமைச் ்சர் கவனத்தில் எடுத்து கொண்டு மேலாண்மை இயக்குரின் உத்தரவை திரும்பப் பெற உரிய உத்த ரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக் ்கிறார்.