ஏற்காட்டில் பழங்குடியின மக்களின் நலனை பொருட்படுத்தாமல், எண் 6 சாலையை அமைக்காமல், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக எண் 7 தார்ச்சாலை அமைத்த ஆட்சியரை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், செயலாளர் எ.கோவிந்தன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இதில், நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.