tamilnadu

img

‘வாலிநோக்கத்திற்கு உயிர்கொடுங்கள்’

இராமநாதபுரம், டிச.4- தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள், அதிகாரிகளி டம் உப்புத் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக் கத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், இராம நாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்  கனி, உப்பு நிறுவன மேலாண் இயக்குநர் ராஜாமணி  உட்பட பலர் ஆய்வு செய்த னர். அப்போது சிஐடியு நிர்வாகிகள் குமார வடிவேல், பச்சைமால் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், “1974-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்ட மக்க ளுக்காக வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தில் 30 கிராமங்க ளைச் சேர்ந்த 1,220 பேர் வேலை செய்து வரு கின்றனர். கடந்த கால ஆட்சியின் நிர்வாகச்  சீர்கேட்டால்  நிறுவனம் பாதிக்கப்பட்டுள் ளது. தற்போதைய அரசு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில்  தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண மாக  ரூ.5,000 வழங்க வேண்டும். கூடுதல்  நிதி ஒதுக்கி வேலை வாய்ப்பை  அதிகரிக்க வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, மின்  சார வசதி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தை களுக்கு அரசுப் பள்ளி- கலைக் கல்லூரி  உரு வாக்க வேண்டும். போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.  தனியார் தலையீட்டை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு  ஏற்று நடத்துவதன் மூலம் கூடுதல் வேலை  வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல் நல  பாதிப்புகளை தவிர்க்க இங்கு இயங்கும் புரோமின் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு 15 நாள் பணிக்கொடை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;