தாராபுரம், பிப்.7- சின்னக்காம்பாளையம் பேரூராட்சி 4 ஆவது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 ஆவது வார்டில் போட்டியிட ஜி.மகுடீஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இவரை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்த மகேஸ்வரி என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, ஜி.மகுடீ ஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளில் போட்டி யிட்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.